3rd December 2021

சதம் விளாசினார் லோகேஷ் ராகுல்: 336 ரன்கள் குவித்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் சதம் அடித்தார். கோஹ்லி, ரிஷாப் பன்ட் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்தனர்.

இந்தியா வந்த இங்கிலாந்து அணி புனேயில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. கைவிரல் காயத்தால் விலகிய மார்கனுக்குப் பதில் இங்கிலாந்து கேப்டனாக பொறுப்பேற்ற பட்லர், ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார். சாம் பில்லிங்ஸ், மார்க் உட் நீக்கப்பட்டு டாப்லே, டேவிட் மலான், அறிமுக வீரராக லிவிங்ஸ்டோன் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் தோள்பட்டை காயத்தால் வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதில் ரிஷாப் பன்ட் இடம் பெற்றார்.

ராகுல் சதம்

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. 17 பந்தில் 4 ரன் மட்டும் எடுத்து திரும்பினார் தவான். வேகமாக ரன்கள் சேர்த்த ரோகித், 25 ரன்னுக்கு அவுட்டானார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோஹ்லி 62வது அரைசதம் அடித்தார். இவர் 66 ரன்னுக்கு அவுட்டானார்.
அடுத்து லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் இணைந்தனர். ராகுல், ஒருநாள் அரங்கில் ஐந்தாவது சதம் அடித்தார். சிக்சர் மழை பொழிந்த ரிஷாப் பன்ட், ஒருநாள் அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். இவர் 40 பந்தில் 77 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 35 ரன் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 336 ரன்கள் எடுத்தது. குர்னால் பாண்ட்யா (12) அவுட்டாகாமல் இருந்தார்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page