3rd December 2021

கொரோனா தடுப்பு: சென்னையில் போக்குவரத்து அதிகாரியின் செயலுக்கு பாராட்டு

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 22 தமிழகத்தில் சுய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து நேற்று இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் நாடு முழுவதும் 144 தடையை அமல் படுத்தினார்.

ஆனால் இன்றளவும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆகையால் அத்தியாவசியமில்லாமல் வெளியில் வருவோருக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை ஸ்பென்சர் பிளாசா அருகில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு கொரோனா தொற்றின் வீரியத்தையும் அதனால் ஏற்பட போகும் விளைவுகள் பற்றியும் எடுத்துக்கூறியதோட இரு கைகளையும் கூப்பி தயவு செய்து வெளியில் வராதீர்கள் என வேண்டுகோளும் விடுத்தார். இதை கேட்ட சாமானியர் ஒருவர் திடீரென போக்குவரத்துக்கு காவலருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் காலில் விழுந்தார். இச்செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், மனிதம் இன்னும் பெரிதளவு இருப்பதை உணர்த்துகிறது. மேலும் இச்செயலுக்காக அந்த போக்குவரத்து அதிகாரிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

You cannot copy content of this page