30th November 2021

#IPL2021: மாஸ்(க்) என்ட்ரியுடன் மும்பை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மாஸ்(க்) என்ட்ரியுடன் மும்பை வந்தடைந்தது.

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தது. சென்னை அணி, தனது முதல் போட்டியில் டெல்லி அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி, ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணி, மும்பைக்கு சென்றடைந்தது. அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியது.

அந்த பதிவில், “வணக்கம் மும்பை, கனவு நகரத்திற்குள் மாஸ்(க்) என்ட்ரி” என பதிவிட்டுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் ஐந்து லீக் போட்டிகளை மும்பையில் விளையாடவுள்ளது. இதனால் சென்னை அணி, மும்பையில் பயிற்சியை மேற்கொள்ளும் என அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page