26th October 2021

கடலூரில் சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி!

மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் மீனவ கிராமத்தில் சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.

நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வேல்விழி தலைமை தாங்கி, கடற்கரை தூய்மை தினம் குறித்தும், திடக்கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளக்கி கூறினார்.

பின்னர் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் அனந்தராமன், தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் குப்பைகள் சேகரித்தனர்.

அப்போது சுமார் 300 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டது. பின்னர் அவை சிலம்பிமங்களம் ஊராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சங்கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page