8th December 2021

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மைய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடருடம் என கூறப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவனை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியமில்லை.

கல்லூரியில் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேனீர் கப்புகள், டயர்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடையும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. செப். 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Dailyhunt

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page