36 வார்டுகளில் 15ல் தான் போட்டி: நகராட்சியை கைப்பற்றுவோம் என பாஜக கோயிலில் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் மொத்தம் 211 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பாஜக 15 வார்டுகளில் மட்டும் போட்டியிடுகிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளர்கள் மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு தாமரைப்பூவுடன் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பின்னர், மீன்கூடை சுமந்து தெருக்களில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு வரிவசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும், நகராட்சி ஒப்பந்தங்களில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், வரி வருவாயை மட்டுமே நம்பியிருக்காமல், பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு நகராட்சி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டனர்.

மேலும், 36 வார்டுகள் உள்ள நகராட்சியில் 15 இடங்களில் மட்டுமே போட்டியிட்டாலும், நகரமன்ற தலைவர் பதவியை கண்டிப்பாக கைப்பற்றுவோம் என்று கூறி தாங்கள் வெற்றி பெறப்போவதை ஊருக்கு பறைசாற்றும் விதமாக பட்டாசு வெடித்து, பிரசாரத்துக்குப் புறப்பட்டனர்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page