1st August 2021

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால்,
சிபிஎஸ்இ-யின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்புகள் கடுமையாக வலிவுறுத்தி வந்தன.

இன்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி அந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாவது, “அரசிற்கு மாணவர்களின் நலனுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கும். அவர்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சிபிஎஸ்இ-யில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பொதுத்தேர்தவு ரத்து செய்தும் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்தவை ஒத்திவைப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், பிரமதர் நரேந்திர மோடியின் இந்த முடிவிக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

“ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் அறிவுரையைக் கேட்டு பிரதமர் மோடி செயல்பட்டதிற்கு பாராட்டுகள் வெல் டன் மோடி ஜி.. நாட்டு மக்களின் நலனுக்காக நாம் ஒற்றுமையாக செயல்படுவது நமது ஜனநாயக கடமை.” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

Source:https://www.news7tamil.live/congress-welcomed-the-union-govts-cbse-decision-on-board-exam.html

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page