நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் என பலருக்கும் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், ‘கொரோனா பாதிப்பை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்கள் உள்பட யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் இப்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

You cannot copy content of this page