இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘ஆல்பம் ‘, ‘வெயில்,’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உட்பட சில படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் இப்போது ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணதி நடித்துள்ள, ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் வசந்தபாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை சமூக வலைதளப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில், ‘அன்புள்ள நண்பர்களுக்கு. கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அதனால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்து வர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: News7 Tamil

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்…!

admin See author's posts

You cannot copy content of this page