30th November 2021

கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு தனி சவக்கிடங்கு அமைக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை!

மயிலாடுதுறையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட புள்ளி விபரங்கள் சுகாதாரத்துறை அறிக்கையில் வெளிவருகின்றன. அரசு மருத்துவ மனையில் போதிய படுக்கை வசதி இன்றியும், ஆக்சிஜன் வசதிகள் குறைவாக இருப்பதாலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மருத்துவமனைகளுக்கு பல்வேறு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றார்கள். இது ஒருபுறமிருக்க மறுபுறம் சிகிச்சை பலனின்றி பலர் உயிரையே இழக்கின்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை பிணவறை கட்டிடத்தில், சாதாரணமாக இயற்கையாகவோ, விபத்திலோ, அகாலமாக இறந்தவர்கள் உடல்கள் வைக்கப்பட்டு இருப்பதோடு, கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களும் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக கொரோனாதொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பிரேத பரிசோதனை கூடத்தில் பணியாற்றுபவர் கொராணாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் உடலையும், சாதாரணமாக இறந்தவர் உடலையும் மாறி மாறி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்ற வகையில் பேக்கிங் செய்கின்ற பணியை மேற்கொள்கின்ற பொழுது, நிச்சயமாக கொரானா பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. சாதாரணமாக இறந்தவர்களின் உடலை அவர்களின் உறவினர்களே தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று வழக்கமாக செய்கின்ற இறுதிச் சடங்குகளை செய்து பிறகு இடுகாட்டுக்கு உறவினர்கள் நண்பர்கள் உடன் எடுத்துச் செல்கிறார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலும், இயற்கையாக இறந்தவரின் உடலும் ஒரே அறையில் இருந்து ஒரே நபரால் அனுப்பப்படுகின்ற காரணத்தினால், அந்தத் தொற்று கிராமங்களில் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆகவே உடனடியாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் கொரானா தாக்கப்பட்டு இறந்தவர்களுக்காக தனி அறை உருவாக்கப்படவேண்டும். அல்லது தீப்பாய்ந்தான்அம்மன் சுடுகாட்டில் உள்ள மின் எரிவாயு தகன மேடைக்கு முன்பாக உள்ள தியான மண்டபத்தை கொரோனா பிரேதங்கள் வைப்பதற்கான அறையாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நோய்த்தொற்றை குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த விஷயத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரையும், சுகாதாரத்துறையையும் பொதுமக்களின் நலன் கருதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page