கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

மயிலாடுதுறை தேம்பாவணி திறன் வளர் மையத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டையில் திருஇருதய சகோதரர்கள் சபையால் செயல்பட்டு வரும் தேம்பாவணி திறன் வளர் மையத்தில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மைய இயக்குனர் அருட்சகோதரர் பங்கிராஸ் தலைமை வகித்தார். திருஇருதய சகோதரர்கள் இல்லத் தலைவர் அருட்சகோதரர் டேவிட்ராஜ், ஆசிரியர்கள் அசோக், ஜெத்ருத் மேரி, அருட்சகோதரர்கள் மரியதாஸ், டேவிட்குமார், ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருஇருதய சகோதரர்கள் சபையின் ஆஞ்சலோ புராவின்ஸ் மற்றும் ஜெஸியுட் மிஷன் இணைந்து, கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சோழம்பேட்டை, சித்தர்காடு, மாப்படுகை, வாணாதிராஜபுரம், கோழிகுத்தி, மூவலூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சார்ந்த ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 20 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த கொரோனா நல உதவிகளை டாக்டர்.இராஜசிம்மன் மற்றும் மைய இயக்குனர் அருட்சகோதரர் பங்கிராஸ் ஆகியோர் மக்களுக்கு வழங்கினர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page