30th November 2021

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிதியுதவி: ரூ.28 லட்சம்

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பனார்கோவில், நாகப்பட்டினம், தலைஞாயிறு மற்றும் சீர்காழி ஆகிய 4 வட்டாரங்களை சார்ந்த 147 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றினார் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேட்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் , தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளில் (குPழு) உள்ள உறுப்பினர்கள் தங்கள் தொழில்களின் மூலம், வளமும், வலிமையும் பெறுவதற்காகவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்த மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்கிடவும், தமிழ்நாடு  ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் ரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.05.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

அந்த சிறப்பு நிதியுதவித் தொகுப்பின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11.11 கோடி மதிப்பில் 2589 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் செம்பனார்கோவில், நாகப்பட்டினம், தலைஞாயிறு மற்றும் சீர்காழி ஆகிய 4 வட்டாரத்திற்குட்பட்ட 147 கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு முதல் தவணையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 47 லட்சமும்இ மற்றும் 147 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 94 லட்சமும் வழங்கப்பட்டு, இந்நிகழ்வின் முன்மாதிரியாக இன்றைய தினம் தலைஞாயிறு வட்டாரத்திற்குட்பட்ட 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான கொரோனா சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிதியின் மூலம் தனிநபர் தொழில் முனைவோருக்கு தொழில் திட்டத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக தொழில் புரியும் நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும் கிராம வறுமை ஒழிப்பு சங்க செயற்குழு முடிவு செய்து நிதி வழங்கப்பட்டவுள்ளது.

59 உற்பத்தியாளர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.88 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

5 பயனாளிகள் அடங்கிய 8 தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி, கலைப் பொருட்கள் உற்பத்தி போன்றவை) தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படவுள்ளது.

புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலை இல்லாத 167 இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ,1.67 கோடி நீண்ட காலக் கடனாக வழங்கப்படவுள்ளது.

3 உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் ரூபாய் மூலதன மானியமாக வழங்கப்படவுள்ளது.

 மேற்கண்ட பயன்களைப் பெற இத்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகம், 4 வட்டார திட்ட அலுவலகங்கள் மற்றும் 4 வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலமுருகன், ஊரக புத்தாக்கத் திட்ட இயக்குநர் கே.செல்வம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இளவரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page