விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி ரெடி !

AH Vaccine Clamshell Tray 2020 Nobivac

உலகில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை மட்டுமல்லாமல் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியானா கார்னிவாக் கோவ் என்ற மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய மூத்த அதிகாரி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கார்னிவாக் கோவ் தடுப்பூசி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக நாய், பூனைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்று கூறினார்.மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளித்துள்ளது என்றும் கூறினார். கார்னிவாக் கோவ் தடுப்பூசியை அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுள்ளன என்றும் இதனால் ஏப்ரல் மாதம் முழுவதிலும் தடுப்பூசிகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 Source : செய்தி சோலை

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page