26th October 2021

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நூற்றாண்டுகள் கடந்த தஞ்சாவூர் யூனியன் கிளப், காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கம் ஆகியவை செயல்பட்டு வந்தன. இவற்றில் காவிரி லாட்ஜ், ஜூபிடர் திரையரங்கத்துக்கான 99 ஆண்டுகள் குத்தகை காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதேபோல, 100 ஆண்டுகள் கடந்த யூனியன் கிளப்புக்கு ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு தொடர்புடைய நிர்வாகங்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தினர். இருப்பினும், இந்த இடங்கள் காலி செய்யப்படாமல் இருந்து வந்தன.

எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றும் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டிடங்களைக் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸை அவற்றின் நுழைவுவாயில் கதவில் ஒட்டுமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உத்தரவிட்டார்.

இதன்படி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் இன்று (செப். 21) காலை ஜூபிடர் திரையரங்கத்துக்குச் சென்றனர். தொடர்ந்து திரையரங்க வாயில் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அதில், “தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மேற்கண்ட இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுதல்) 1975-ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தகவலைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக தண்டோரா போடப்பட்டது.

இதையடுத்து, காவிரி லாட்ஜ் வாசல், யூனியன் கிளப் வாசல் கதவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையொட்டி, காவல் துறையினர் பாதுகாப்புக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோல, காவிரி லாட்ஜ் முன்புறம் உள்ள கடைகளும் தீபாவளி பண்டிகைக்குப் பின்பு அகற்றப்பட உள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

கையகப்படுத்தப்பட்ட யூனியன் கிளப் 29,743 சதுர அடியும், காவிரி லாட்ஜ் 40,390 சதுர அடியும், ஜூபிடர் திரையரங்கம் 13,605 சதுர அடியும் பரப்பளவு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page