25th January 2022

கடலூர்: மகனின் திருமண வரவேற்புக்கு சென்றபோது விபத்து – டேங்கர் லாரி மீது கார் மோதல்; இருவர் உயிரிழப்பு , கைக்குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்!

ராமநத்தம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். மேலும் கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தவர் ஜவகர்(வயது 60). இவரது மனைவி ஜாஸ்மின்(55). இவர்களது மகன் ஜெப்ரியல் ராஜா. இவருக்கும், தேனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சென்னையில் கடந்த 20-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு விழா மணப்பெண்ணின் சொந்த ஊரான தேனியில் இன்று(சனிக்கிழமை) நடைபெற இருந்தது.

இதில் பங்கேற்க ஜவகர், ஜாஸ்மின், இவர்களது மருமகனான திருமங்கலம் அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஜவன்வினித் (27), மகள் ஜெனி(24), 4 மாத பேரக்குழந்தை ஆகியோருடன் சென்னையில் இருந்து ஒரு காரில் தேனியை நோக்கி நேற்று காலை புறப்பட்டனர்.

காரை ஜவகர் ஓட்டி வந்தார். முன் இருக்கையில் ஜாஸ்மினும், பின் இருக்கையில் அவர்களது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் இருந்தனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த லெக்கூர் அருகே மாலை 3.30 மணியளவில் வந்தபோது ஜவகரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

அப்போது காரில் இருந்த ‘ஏர்’ பலூன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் ஜவகர், ஜாஸ்மின் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஜெனி, ஜவன்வினித் மற்றும் அவர்களது 4 மாத ஆண் குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விபத்தில் பலியான ஜவகர், ஜாஸ்மின் ஆகியோரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டது.
அதில் 2 பேரின் உடலை ஏற்ற அதன் டிரைவரை போலீசார் உதவிக்கு அழைத்தனர். ஆனால், அவர் எனது வேலை வாகனம் ஓட்டுவது மட்டும் தான், இறந்தவர்களின் உடலை ஏற்றுவது எனது வேலை இல்லை என்றார். இதனால் போலீசாருக்கும், அந்த டிரைவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடம் அவர்களது வாக்குவாதம் நீடித்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உதவியுடன், 2 பேரின் உடலையும் அமரர் ஊர்தியில் ஏற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page