30th November 2021

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இறந்தவரின் உடலுடன் தத்தளித்த கிராம மக்கள்!

பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுடுகாடு வசதி இல்லாததால், அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள வெள்ளாற்றை கடந்து ஆற்றின் மறுகரையில் அடக்கம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் (வயது 65) என்பவர் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், வெள்ளையனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு தூக்கி சென்றனர்.

அப்போது கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் அவர்கள் ஆற்றை நீந்தி கடந்து விடலாம் என்று எண்ணி, வெள்ளையன் உடலை தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கினர். சிறிது தூரம் சென்றதும், ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவர்களால் நீந்த முடியாமல் தத்தளித்தனர். இதனால் அவர்கள் ஆற்றை கடக்க முடியாமல், மீண்டும் கரைக்கு திரும்பினர்.மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் வெள்ளையனின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அப்போது அங்கு வந்த முருகன்குடியை சேர்ந்த மாயவேல் மகன் குமார் என்பவர், அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், அதனால் அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறி கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி அறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பிரச்சினைக்குரிய அந்த இடத்தை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து தருவதாக போலீசார் கூறினர். அதனால் மாயவேல் அங்கிருந்து சென்றார். இதையடுத்து அந்த இடத்தில் வெள்ளையனின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் யாரேனும் இறந்தால் அவர்களது உடலை வெள்ளாற்றின் கரையில் அடக்கம் செய்வது வழக்கம். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்ல முடியவில்லை. இதனால் கிராமத்தின் அருகில் சுடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page