சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியல்!

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வரும் மீனவர்கள் வலைக்கு அனுமதி கோரி கடலூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். சுமார் 2 கி.மீ தூரம் ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளி கடற்கரை செல்லும் சாலையில் மறித்தனர்.

இதனையடுத்து அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் சுமார் 1.15 மணிக்கு துவங்கிய போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page