18th January 2022

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 23-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று 2 மாதத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது.

இதனால் பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, ரயில் போக்குவரத்தும் இயக்கப்பட்டன. கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு மிகுந்த கவனத்துடன் மக்கள் கூடும் பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதனால் கடந்த முறை ஜூலை 31-ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த ஆங்காங்கே விழிப்புணர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழ்நாடு எல்லையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் 3-வது அலை தமிழ்நாட்டில் உருவாகி விடக்கூடாது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வருகிற 9-ந் தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வர உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவ நிபுணர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த 9-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் தளர்த்தாமல் இப்போது உள்ளது போல் நீடிக்கலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கவும், கொரோனா விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து இன்று மாலை அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி, ஆகஸ்டு 23-ந் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page