25th January 2022

9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் நேரடியாக வகுப்புகள் துவங்க உள்ளன.

வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் 3 மாதங்கள் கழித்து பள்ளிக்கூடங்கள் திறப்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை 30 சதவீதம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு 30 சதவீதம் பாடத்திட்டங்களை குறைத்துதான் வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஆனால் தேர்வு நடத்தப்படாததால் ‘ஆல் பாஸ்’ அறிவிக்கப்பட்டது.

தற்போது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

எனவே தமிழக அரசும் கடந்த ஆண்டைபோல் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page