கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவியுங்கள் – பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இயற்கை பேரழிவாக அறிவித்தால் கொரோனா பாதித்த மக்களுக்கு மாநில பேரழிவு நிதியில் இருந்து செலவு செய்ய முடியும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. அங்கு தினசரியும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா மரணங்கள் அதிகரிப்பதால் மார்ச்சுவரியில் இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடுகாடுகளும், சுடுகாடுகளும் நிரம்பி வழிகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார விடுமுறை நாட்களில் ஊராடங்கு என அறிவித்து பின்னர் 15 நாட்களுக்கு முழு ஊராடங்கு அறிவித்து விட்டார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.

மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதித்த மக்களுக்கு மாநில பேரழிவு நிதியில் இருந்து செலவு செய்ய முடியும். மத்திய பேரழிவு நிர்வாக சட்டத்தின் கீழ் அனைத்து மாநில பேரழிவு நிர்வாக சட்டங்கள் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மாநில பேரழிவு நிதியில் இருந்து செலவு செய்ய முடியும். எனவே பிரதமர் இதற்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும். வெள்ளம், இடி தாக்குதல், கனமழையால் ஏற்படும் சொத்து சேதம் மற்றும் உயிரிழப்பு போன்றவற்றிற்கு இயற்கை பேரழிவு நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க முடியும்.

கொரோனா வைரஸால் மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு மாநில பேரழிவு நிதியில் இருந்து உதவி செய்ய விரும்புகிறது. ஆனால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தேவை என்று உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page