19th January 2022

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமானது ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையமானது தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 15 ஆயிரத்து 931 நபர்களும், 2ம் தவணை தடுப்பூசி 35 ஆயிரத்து 387 நபர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 318 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை தேவைக்கேற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் எந்தவித தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.மகேந்திரன், மயிலாடுதுறை வட்டார மருத்துவ அலுவலர் மரு.சரத்சந்தர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page