20th September 2021

மயிலாடுதுறையில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், முக்கரும்பூர் ஊராட்சியில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டமானது தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளோருக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பரிசோதித்து மாத்திரை மற்றும் மருந்துகள் வழங்கும் திட்டமாகும். மேலும் முதுமை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான செவிலிய உதவிகள் அவர்கள் வீட்டிலேயே வழங்கப்படும். கை கால் செயல் இழந்தவர்கள் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பிசியோதெரபி மருத்துவமும் வழங்கப்படும்.

இத்திட்டமானது மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 ஆயிரம் நோயாளிகளும் பயனடையுமாறு படிப்படியாக அனைத்து வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியலில் இல்லாமல் இருந்தாலும் புதிதாக மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். பொதுமக்கள் அரசின் திட்டங்களை ஆர்வமுடன் கேட்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர். பின்னர் மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பயனாளிகளின் வீட்டிற்கே சென்று மருந்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குனர் மரு .பிரகாஷ், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page