மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3-வார்டுகளில் திமுக வெற்றி!!



மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது. மயிலாடுதுறை நகராட்சியில் 19-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் இறந்ததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மேலும் தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மொத்தம் 59 நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், பேரூராட்சிகளில் 60 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் 65.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மயிலாடுதுறை நகராட்சிக்கு தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரி, சீர்காழி நகராட்சிக்கு சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப் பள்ளி, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி என 3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்நிலையில் குத்தாலம் பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3-வார்டுகளில் திமுக வெற்றி.வார்டுஎண் 1-சேகர் 421 திமுகவார்டு எண் 2-சம்சுதீன் 386 திமுகவார்டு எண் 3-முத்துலட்சுமி 300 திமுக வெற்றி பெற்றுள்ளனர்.