20th September 2021

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

சொந்த உபோயோகத்திற்காக 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் 2022 ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு கலவாதியாகிறது அதனால் பழைய வாகனங்கள் வாங்கி ஏமாற வேண்டாம் என்று போக்குவரத்துக்கு அலுவலர்கள் எச்சரித்து உள்ளனர் .

தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன இதில் 15 முதல் 20 ஆண்டுகளான வாகனங்கள் 20 முதல் 25 சதவீதம் இருக்கும் என புள்ளிவிவரங்கள் கூறுகிறது இதுபோன்ற வாகனங்களால் காற்று மாசடைவதாகவும் .சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இதை பரிசீலித்து ஒன்றிய அரசு புதிய வாகன உபோயோக சட்டத்தின்படி சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை 20 ஆண்டும் வாடகை வாகனம் 15ஆண்டுகள் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது இச்சட்டமானது வரும் 2022 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சட்டமானது அமலுக்கு வந்த பின் பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான அரசு நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படும் அதை அவர்கள் அன்றைய மோட்டர் வாகன சட்டத்திற்குட்பட்ட புதிய பிஎஸ் 6மற்றும் எலட்ரிக் வாகனங்கள் வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் சிலர் தற்போது 20 ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் 2லட்சம் மற்றும் 2லட்சம் என அதிக விலைக்கு விற்று வருகின்றன எக்காரணம் கொண்டு பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் இந்த வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022ஆண்டுக்குள் மேல் ஓட்ட முடியாது வாகனம் அனைத்தும் உடைக்க்கும் போது வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப்படும் அனைத்தும் 2022 ஆண்டு மார்ச்சில்கலவாதியாகிவிடும் என்று போக்குவரத்து அலுவலர்கள் எச்சரித்துள்ளனர் .

எது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் சொந்த பயன்பாட்டிற்குகாக 20ஆண்டுகளாக வாடகை வாகனம் 15ஆண்டுகளாக வாகனங்கள் வரும் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு கலவாதியாகிறது என்று ஒன்றிய அரசு புதிய மோட்டார் சட்டத்தை பிறப்பித்துள்ளது இச்சட்டத்தின்படி முதல் படியாக அரசு வாகனங்கள் தான் உடைக்கப்படும் அதன் பிறகு தான் சொந்த உபயோகத்திற்காகவும் வாடகைக்கு வைத்திருக்கும் வாகனங்கள் உடைக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் .

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page