18th October 2021

அழகர் ஆற்றில் இறங்க கூடாது! நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி அளிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. சித்திரை திருவிழாவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் திருத்தேரோட்டம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகும். இந்த நிகழ்ச்சிகளின்போது மதுரையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு கொரோனா வைரஸின் 2ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் விழாவை நடத்த இயலாது என கோவில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, கொரோனா பரவி வரும் நிலையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி அளிப்பது எப்படி சாத்தியம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை, வெறும் குப்பைகளே நிறைந்துள்ளன எனவும நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.அதேநேரத்தில் கொரோனா மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதோடு, மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி அளிக்க இயலாது அதிரடியாக அறிவித்தனர்.

Source: News TM

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page