திருக்கடையூர் அருகே முதியவர் அடித்துக் கொலை – 5 பேர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே கிள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன் கோட்டத்தை சேர்ந்தவர் சித்திரன் (வயது 70). விவசாய கூலி தொழிலாளி இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளன. இவரது மகன் பிரகாஷ் (15) என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (வயது 60), கலியபெருமாள் மகன் பாலமுருகன் (35). இவர்களுக்கும், சித்திரன் குடும்பத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில்  மகன் பிரகாஷ் பள்ளிக்கு செல்லாததால், நேற்று இரவு அவரது தந்தை சித்திரன் அவனை திட்டியுள்ளார்.
இதனைக் கேட்ட பிச்சைக்கண்ணு, பாலமுருகன், காளியம்மாள் (32),  பிரியா (30) ஜெயலட்சுமி (55) ஆகிய 5 பேரும் தங்களை ஏன்  திட்டுகிறாய் என  சித்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் பிச்சைக்கண்ணு அங்கு கிடந்த  கட்டையை எடுத்து  சித்திரனை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சித்திரன் மனைவி மற்றும் அவரது மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலின்பேரில் செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் சித்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு, ஜெயலட்சுமி, பாலமுருகன், காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரை வழக்குபதிவு செய்து கைது  செய்தனர். இந்த சம்பவம் ராமன்கோட்டகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page