பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகன விற்பனை அமோகம்!



பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் விற்பனை உயருகிறது. பெட்ரோல், டீசலை விட மின்சார வாகனங்களுக்கு பயன்பாட்டு செலவு குறைவாக இருப்பதால் அவற்றுக்கு உலகெங்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது மேலும் சுற்றுசுழலை மாசு படுத்துவதும் மிகவும் குறைவு என்பதால் மின்சார வாகனம் பயன்பாட்டை அரசுகளும் ஊக்குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை ஐந்து மடங்கு வரை அதிகரித்து உள்ளது.
புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது 2019-20ம் ஆண்டில் 24,843 ஆக இருந்த மின்சார வாகன விற்பனை 2020-21ல் 41,046 ஆக அதிகரித்தது, கடந்த 2021-22 நிதியாண்டில் இது ஐந்து மடங்கு அதிகரித்து 2,31,338 ஆக இருந்தது. இதுபோல மின்சார ஆட்டோக்கள் விற்பனை 2019-20ல் 1,40,684 ஆகவும் 2020-21ல் 88,391 ஆகவும் இருந்தநிலையில் கடந்த 2021-22 நிதியாண்டில் 1,77,874 ஆக அதிகரித்து உள்ளது. மின்சார கார்களின் விற்பனை 2019-20 ல் 2,280 ஆகவும், 2020-21 ல் 4,984 ஆகவும் இருந்த நிலையில் கடத்த நிதியாண்டில் 17,802 ஆக அதிகரித்து உள்ளது. மின்சாரத்தில் இயங்கும் சரக்கு வாகனங்களின் விற்பனை 400,490,2203 என ஒவ்வொரு நிதியாண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பால் அத்துறையிலும் களமிறங்க முன்னனி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளனர்