3rd December 2021

கல்வி மேம்பாட்டுக்காக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

மயிலாடுதுறை அருகேயுள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரியும் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

தற்போது பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஏ.ஐ.சி.டி.இ வகுத்துள்ள மார்க்க தர்ஷன் திட்டத்தின்கீழ் ஏ.வி.சி பொறியியல் கல்லூரியும், புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

இத்திட்டத்தின் கீழ் சிறப்பு செயல் திட்டங்கள், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிகள், ஆராய்ச்சி மேம்பாடு, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இரு கல்லூரிகளும் இனணந்து செயல்படும். மேலும் என்.பி.ஏ எனப்படும் தரக்கட்டுப்பாடு பெறுவதற்கான பயிற்சியும் இதன்முலம் செயல்படுத்தப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மணக்குள விநாயகர் கல்லூரியை சேர்ந்த வேல்முருகன் வழங்க, ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் செயலர் கி.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி.சுந்தர்ராஜ், இயக்குனர் (நிர்வாகம்) எம்.செந்தில்முருகன், துணைமுதல்வர் எஸ்.செல்வமுத்துகுமரன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page