25th September 2021

நாகையில் பொறியியல் மாணவர்களுடன் தொழில்துறை வல்லுநர்கள் சந்திப்பு

நாகையில் தனியார் பொறியியல் கல்லூரியில் தொழில்துறை வல்லுநர்கள் சந்திப்பு நடந்தது.

நாகையில் பொறியியல் கல்லூரியில் பல்வேறு தொழில் துறையை சேர்ந்த வல்லுநர்கள் மாணவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி கார்பரேட் கனெக்ட் என்ற தலைப்பில் நடந்தது. கல்வி குழுமங்களின் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். செயலாளர் பரமேஸ்வரன் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதன்மை அதிகாரி சந்திரசேகரன் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த மனிதவள மேம்பாட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இயந்திரவியல், கணினிதுறை, மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு மற்றும் தோலை தொடர்பியல் துறை, கட்டுமானம் துறை, தொழில் நிர்வாகம், ஐடி துறை என்று 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து மனிதவள மேம்பாட்டாளர்கள் கலந்து கொண்டு மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு திறன் பயிற்சி, திறன் செயல்பாடுகள் சார்ந்த பயிற்சி, பல்வேறு துறைகளில் குவிந்து இருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதை பெறுவதற்கு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் சங்கர் கணேஷ், முதல்வர் ராமபாலன், துறை தலைவர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேர்வு நெறியாளர் சின்னதுரை நன்றி கூறினார்.

Leave a Reply

You cannot copy content of this page