3rd December 2021

தமிழகத்துக்கு மகுடம் சூடிய மயிலாடுதுறை எவரெஸ்ட் கேம்பிரிஜ் பள்ளி மாணவர்கள்

ராஜஸ்தானில் நடந்த 6-வது தேசிய மாணவர்கள் ஒலிம்பிக் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதலிடமும் 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்து மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்துள்ளனர் எவரெஸ்ட் கேம்பிரிஜ் பள்ளி மாணவர்கள்.

நவம்பர் 15 முதல் 17 வரை ராஜஸ்தானில் 6-வது தேசிய மாணவர்கள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து பல அணிகள் பங்குபெற்றது. பல கட்டங்களாக நடந்து இப்போட்டியில் மயிலாடுதுறை எவெர்ஸ்ட் கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் மிக சிறப்பாக விளையாடி,12 வயதுகுப்பட்டவர்கள் போட்டியில் முதலிடமும் 17 வயதுகுப்பட்டவர்கள் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களை பள்ளியின் நிறுவனர் ராஜகோபாலன் மற்றும் பெற்றோர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், சிறப்பு செய்து உற்சாகத்துடன் வரவேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதற்கு காரணியாக விளங்கிய ஆசிரியர்களுக்கும் மற்றும் எந்நாளும் மாணவர்களின் நலனில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எங்கள் மயிலைகுருவின் சார்பாக வாழ்த்துக்கள்.

Leave a Reply

You cannot copy content of this page