19th January 2022

அரசு மருத்துவமனைக்கு தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்:
அம்மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில், தங்களின் மேலான நிர்வாகத்தின் கீழ் மிகச் சிறப்பாக மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறது. குறிப்பாக கொராணா பாதிக்கப்பட்டு நானே மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து உள்ளேன். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அச்சமில்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள். இம்மருத்துவமனையில் பணியாற்றி வருகின்ற தற்காலிக பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இம்மருத்துவமனையின் பாதுகாப்பு பணியிலும், துப்புரவுப் பணியிலும், மற்றும் இதர நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யக் கூடியவர்களாகவும் மிகுந்த கவனமுடன் சிறப்பாக SUMEET சுமிட் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக பணியாற்றி வருகிறார்கள்.

31 நாட்கள் முழுமையாக பணியாற்றினால் அவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 6000 வழங்கப்படுகின்றது. மிக இக்கட்டான நிலையில் இவர்களுடைய பணி மிக மிக அவசியமாகின்றது என்பதை தாங்கள் உணர்வீர்கள். இப்படிப்பட்ட ஊழியர்களுக்கு வேறு எந்த பேட்டா, படிகளும் உதவி நிதிகளும் கிடையாது. குறைவான மாத ஊதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்படகுறைவான மாத ஊதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய தாங்கள் இப்படிப்பட்ட தொழிலாளர்களின் கஷ்டத்தில் பங்குகொண்டு அவர்களுக்கு மாத ஊதியத்தை 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தி கொடுத்து உதவிடுமாறு மயிலாடுதுறை தொகுதி மக்கள் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page