3rd December 2021

குடும்ப அட்டை வகை மாற்ற விண்ணப்பிக் காலம் நீட்டிப்பு

சர்க்கரை மட்டும் பெறக்கூடிய குடும்ப அட்டையை, விருப்பத்தின் பேரில் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்க காலம் நவ. 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி .நாயர் வெளியிட்ட செய்திக் குறிப்பு சர்க்கரை மட்டும் பெறக்கூடியதாக உள்ள குடும்ப அட்டைகளை, குடும்ப அட்டைதாரரின் விருப்பத்தின் பேரில், அரசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ள நவம்பர் 26-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த விண்ணப்பக் காலத்தை நீட்டித்து வழங்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், குடும்ப அட்டை வகை மாற்ற விண்ணப்பக் காலம் நவம்பர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரை மட்டும் பெறக்கூடிய குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டையை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டையாக மாற்ற விரும்பினால் நோவென்பேர்-29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது தொடர்ப்புடைய அங்காடிகளில் நேரடியாகவும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page