8th December 2021

தமிழக அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64 லட்சம்; செக் மூலம் செலுத்த வந்தவரால் பரபரப்பு!

நாமக்கல்: தமிழக அரசின் கடன் மொத்தம் 5.7 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாகவும், இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் இருப்பதாகவும் நிதியமைச்சர் கூறியிருந்தார். இந்த தொகையை காந்தியாவதி ஒருவர், செக் மூலம் செலுத்த, நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்று (ஆக.,9) தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், ‘தமிழக அரசுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடன் இருப்பதாக’ தெரிவித்திருந்தார். அதையடுத்து, நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்த, காந்தியவாதி ரமேஷ் என்பவர், முதல் நபராக, தனது குடும்பத்துக்கான கடன் தொகையை, செக் மூலம் செலுத்துவதற்காக, நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தார்.ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரை சந்தித்து, தன்னிடம் வைத்திருந்த, இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய்க்கான வங்கி காசோலையை அளித்தார். அந்த செக்கை வாங்க மறுத்த, ஆர்.டி.ஓ., ‘இந்த செக்கை பெறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை; உயர் அதிகாரிகளிடம் வழங்குங்கள்’ என, தெரிவித்தார். அப்போது, காந்தியவாதி ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் அறிவித்த அரசு கடன் தொகையில், எனது குடும்பத்துக்கான பங்கை, முதல் நபராக, ரூ.2,63,976 செக் மூலம் செலுத்த, ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தேன். ஆனால், ஆர்.டி.ஓ., அதை ஏற்க மறுத்து, உயர் அதிகாரிகளிடம் வழங்க கூறியுள்ளார்.நான் இந்த செக்கை, மாவட்ட கலெக்டரிடம் வழங்க உள்ளேன்.

Justifyபொதுமக்கள் அனைவரும், அரசு வைத்துள்ள கடனை கட்டவேண்டும். அப்படி செலுத்துபவர்களுக்கு, சுய தொழில் துவங்குவதற்காக, அரசு வங்கி மூலம், 15 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் வழங்க வேண்டும். அதன்மூலம், பொதுமக்கள் சுய தொழில் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுவர். நாட்டின் பொருளாதாரமும் உயரும். இவ்வாறு அவர் கூறினார். அரசின் கடனை செலுத்துவதாக, வங்கி செக்குடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page