22nd January 2022

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ள சம்பா பயிர்களில் எலி தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்த செலவுக்காவது பயிர்கள் விளைந்து கைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாற்றுவிட்டு நடவுசெய்ய தொடங்கியது முதல் தொடர்ந்து மழைபெய்து வருவதால் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்படைந்துள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியின்போது எலிகள் தாக்குதல் குறைவாக இருந்தது. ஆனால் சம்பா, தாளடியில் மயிலாடுதுறை வட்டார பகுதிகளில் எலிவெட்டு தாக்குதல் அதிகரித்துள்ளது, 40 முதல் 80 நாட்கள் ஆன பயிர்களை எலிகள் கடித்து கொஞ்சம் நஞ்சம் இருந்த பயிர்களையும் அழிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

கிட்டிபோட்டு எலிகளை பிடிக்கும் பணியை பலர் செய்கின்றனர். நூறு கிட்டிகள் போட வேண்டுமென்றால் அதற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் ஒரே நேரத்தில் எலிதாக்குதல் இருப்பதால் கிட்டிகள் போடுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் ஒருசில நாட்களிலேயே எலிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடுகிறது.

கடந்த ஆட்சிகாலத்தில் கோடைகாலத்தில் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம்களை வேளாண்மைத்துறை மூலம் நடத்தியது. அதேபோன்று, நடப்பு ஆண்டு கோடை காலத்தில் வேளாண்துறை மூலம் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தினால்தான் அடுத்த குறுவை சாகுபடிக்காவது எலிகள் தாக்குதலில் இருந்து பயிரை காப்பாற்ற முடியும் என்றனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page