விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்தார். விவசாய துறை மற்றும் மின்வாரியம் தோட்டக்கலை போன்ற துறையினர் கலந்துகொண்டனர்.
இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசியது:

காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கததின் தலைவர் குருகோபிகணேசன்:கடந்த 2 ஆண்டுகளாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டுமே பயிர் காப்பிடு இழப்பத்தொகை வரவு வைக்கவில்லை, இந்த ஆண்டு டிகேஎம்.9 என்ற மோட்டா ரக நெல்லை அரசு மீண்டும் கொள்முதல் செய்யவேண்டும் இந்த நெல் ரகத்திற்கு ஈடாக புதிய நெல் ரகத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை இந்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், விவசாயத்திற்கு பம்புசெட் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு மான்யத்தொகையுடன் கூடிய மின் இணைப்பு வழங்க வேண்டும். விவசாயிகளது சந்தேகங்களுக்கான பதிலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர், வேளாண் இணை இயக்குனர் ஆகியோர் தனி செயலியை (ஆப்) உருவாக்கி செயல்படுத்தவேண்டும்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம்:குறை தீர்த்தல் விண்ணப்பங்கள் கணினியில் பதிவு செய்து பதினைந்து தினங்களில் தீர்வு காண வேண்டுகிறோம்.மாவட்ட விவசாயிகள் குறை தீர்த்தல் கூட்டங்களில் அனைத்து துறை தலைமை அதிகாரிகள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம். குறுவை நெல் சாகுபடிக்கு நடப்பு ஆண்டு வரும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்க கூடிய நல்ல சூழல் உள்ளது.

பாரத பிரதமரின் தற்போதைய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டம். பெரும்பான்மை விவசாயிகளுக்கு எவ்வித பலனும் அளிக்கவில்லை. இதனை குறைந்த பட்சம் 20 விழுக்காடு ஊக்கத்தொகை இணைந்த புதிய காப்பீடு திட்டமாக மாற்றி அமைக்க பாரத பிரதமருக்கும் , மத்திய அரசுக்கும் விண்ணப்பித்துள்ளோம். இதனை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டுகிறோம்.

காவிரி டெல்டாவில், வடி முனை குழாய் பயன்படுத்தி ஏப்ரல் , மே மாதங்களில் குறுவை, சம்பா தொகுப்பு திட்டங்களுக்கு மாற்றாக, தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து பயிர்களுக்கும் கடைபிடிக்கப்படும் ஏக்கருக்கு பருவத்திற்கு ரூ.5000 படி இரண்டு பருவத்திற்கு, ஆண்டுக்கு, ஏக்கருக்கு ரூ 10,000 வீதம் பயிர் சாகுபடி பரப்பளவில்உச்ச வரம்பின்றி வழங்க வேண்டுகிறோம். நடப்பு ஏப்ரல் மாதமே முன் குறுவை சாகுபடி துவங்கி உள்ளனர். இதற்கான விதை, இடுபொருட்கள், தடையில்லா மும்முனை மின்சாரம் உறுதி செய்ய வேண்டுகிறோம். மாவட்ட விவசாய வளர்ச்சி குழு உருவாக்க மாவட்ட ஆட்சியர் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.இவ்வாறு நிர்வாகிகள்

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

மழையால் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

admin See author's posts

You cannot copy content of this page