3rd December 2021

12,524 கிராமங்கள்; 1,950 கோடி -பாரத்நெட் டெண்டரை ரத்து செய்த மத்திய அரசு

பாரத்நெட் திட்டம் என்பது கிராமப்புறங்களில் அதிவேக இன்டெர்நெட் இணைப்புகளைத் தரும் மத்திய அரசின் திட்டமாகும். 12,524 கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு வழங்க ரூபாய் 1,950 கோடி செலவில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஊராட்சிப் பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிகளை ஏற்படுத்த இந்த பாரத்நெட் திட்டங்கள் உதவும் என அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து கூறிவந்தனர். 2019-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான டெண்டர்களும் விடப்பட்டன.

தமிழக அரசு இந்தத் திட்டம் தொடர்பான விளக்கங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களுக்குத் தொடர்ந்து அளித்து வந்தது. இந்தநிலையில் தற்போது மத்திய வர்த்தக அமைச்சகம், டெண்டர் விதிகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றுகூறி பாரத்நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து அறிவித்துள்ளது. கருவிகள் கொள்முதல் தொடர்பான டெண்டரில் உள்ள குறைகளைச் சரிசெய்து மீண்டும் டெண்டர்விட மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதைச் செயல்படுத்த `தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்’ என்ற நிறுவனமும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நிறுவன விதி 2013-ன்படி 2018-ம் ஆண்டு TANFINET என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என அமைச்சர்கள் கூறிவந்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்களிலிருந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கங்களை ஏற்காத மத்திய அரசு தற்போது அந்த டெண்டரை ரத்து செய்துள்ளது.

 

source

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page