மயிலாடுதுறை அறம்செய் அறக்கட்டளையின் நெகிழ்ச்சியான செயல்

இன்று நமக்கு வந்த தொலைபேசி அழைப்பில்… மயிலாடுதுறை ஆழ்வார் குளம் அருகிலிருந்து Masilamary Bjp என்பவர் பேசினார். அவர் அளித்த தகவலில். “இங்கே ஒரு அம்மையார் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார் நீங்கள் வாருங்கள் சார், ஏதாவது உதவி செய்யுங்கள் சார்”- என்ற மனித நேயமிக்க அழைப்பை ஏற்று உடனே நாம் அங்கு சென்று பார்த்தோம். அப்போது மதியம் மணி 2.30 சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் மரத்தடியில் சோகமாக அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்ல விசாரிக்க தொடங்கினோம்.. முதலில் பதில் அளிக்காமல் விரக்தியில் இருந்தார். உணவு டீ காபி எது கேட்டாலும், ‘வேண்டாம்’- என்று மறுத்தார். பிறகு, ‘என்னை உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் சாப்பிடவில்லை என்றால் நானும் சாப்பிட மாட்டேன்’. என்று கூறி அவர் அருகிலேயே உட்கார்ந்தோம்.. அப்போது வீட்டிலிருந்து சாப்பிட வரச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. ‘பிறகு வருகிறேன்’ என கூறி வைத்து விட்டேன். இதை கவனித்த அந்த தாயுள்ளம், நீங்கள் போய் சாப்பிடுங்கள் என்றார். நீங்கள் பசியோடு இருக்கும் போது நான் எப்படிம்மா சாப்பிடுவேன்.. நீங்கள் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்று கூறி அருகில் உட்கார்ந்து விட்டேன்.

உடனே சாப்பிட ஒப்புக்கொண்டார். அப்போது மணி மூன்று ஆகிவிட்டது. உடனே அங்கிருந்து சந்தோஷமாக புறப்பட்டு மயிலாடுதுறை வந்து தயிர்சாதமும் ஒரு வாட்டர் பாட்டிலும் வாங்கி விரைந்து வந்தேன். அங்கு அருமை தம்பி மணிகண்டன் பாலா வந்திருந்தார். பிறகு அம்மாவை சாப்பிட வைத்துவிட்டு, சாப்பிட்டு முடித்ததும் மெதுவாக விசாரிக்க தொடங்கினோம். பெயர் லதா என்றும், ஆழ்வார்குளம் அருகில் தான் வீடு என்றும், இரண்டு மகன்கள் ஒரு மகள் என்றும், வேதனையான மனச்சுமையுடன். ஆனால், மிகத்தெளிவாக கூறுகிறார்.

முதலில் விரக்தியாக, இரண்டு நாட்களாக சாப்பிடாமல் பிடிவாதத்தில், சோர்வாக இருந்த அவரை சாப்பிட வைத்த திருப்தி நமக்கு…! யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளாத இப்படி ஒரு தாயை வீதியில் விட்ட, பெண்களே, மகன்களே, மருமகள்களே.. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோருடன் வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தாத்தா பாட்டியுடன் வாழ நாம் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்…

குழந்தைப் பருவத்தில் பெற்றோர் அளித்த பாதுகாப்பை, அவர்கள் முதியவர்கள் ஆனதும் அவர்களுக்கு, நாம்அந்த பாதுகாப்பை உறுதி செய்தாலே நாம் பிறந்த பயனை அடைந்தவராவோம்..!

நண்பர்களே..
இந்த தாயைப் பற்றிய
விவரங்கள் தெரிந்தால்…
7010307300
+917010554503
+916385755202
என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page