3rd December 2021

மயிலாடுதுறை பியர்லஸ் தியேட்டர் சாலையை உடனே சீரமைக்க நகராட்சி ஆணையருக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை!

மயிலாடுதுறையின் பிரதான சாலைகளில் ஒன்றாக திகழ்வது புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பியர்லெஸ் தியேட்டர் சாலை ஆகும். இச்சாலையின் வழியாகத்தான் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தரும், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், பொறையாறு, நாச்சியார்கோவில், நன்னிலம் மார்க்கத்திற்கான பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்க கூடிய நகரப் பேருந்துகளும், மினி பேருந்துகளும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை வந்து சென்று கொண்டிருக்கின்றது.

மயிலாடுதுறையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லுகின்ற மாணவ-மாணவிகள் ஆயிர கணக்கானோர் இப்பேருந்து நிலையத்திற்கு, சுற்றுவட்டார உள் கிராமங்களிலிருந்தும் வெளியூரில் இருந்தும் வந்து இறங்கி செல்கின்றார்கள். மேலும் இப்பகுதியை ஒட்டித்தான் பல்வேறு மருத்துவமனைகளும், வணிக நிறுவனங்களும் இருப்பதனால், பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி வரும் பொதுமக்கள் மற்றும் நகரத்திலுள்ள வடக்குப் பகுதியில் உள்ளவர்களும் தெற்குப் பகுதியில் உள்ளவர்களும் பரஸ்பரம் இரு பகுதிகளுக்கும் சென்றிட இந்த சாலையை தவிர்த்து செல்லமுடியாத அளவிற்கு மிக முக்கியமான இணைப்பு சாலையாக உள்ளது.

கச்சேரி சாலையையும் பட்டமங்களத் தெருவில் இணைக்கக் கூடிய இந்த சாலை சுமார் 500 மீட்டர் மட்டுமே நீளமுள்ள சாலையாகும். அப்படிப்பட்ட மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இச்சாலையில் உள்ள இடத்தில்தான் நகராட்சி துலா உற்சவ சிறப்பு பொருட்காட்சி கடைகளை ஆண்டுதோறும் பல லட்சத்திற்கு ஏலம் விட்டு வருவாய் வரக்கூடிய, பொருட்காட்சியும் நடைபெற்று வருவதுடன் அதற்கென்று பெண்கள் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இப்படியாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், திரைப்படத்திற்கு வருவோர் என்று அந்த இடத்திற்கு வந்து செல்வோர் என்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலை மிக மோசமாக இருப்பது குண்டும் குழியுமாக மக்கள் நடமாடவே முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதுடன் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத ஒரு அவல நிலை, மருத்துவமனைக்கு செல்வோர் எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் தவிக்கின்ற சூழல் ஒட்டுமொத்தமாக மக்களே நடக்கமுடியாத சாலையாக மாறிவிட்ட சாலையின் அவல நிலையை உணர்ந்து உடனடியாக நகராட்சி ஆணையர் இச்சாலையில் பயன்பாட்டை கருதி தரம் உயர்த்தி தரமான தார் சாலையாக உடனடியாக உருவாக்கித்தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளார்.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

You cannot copy content of this page