நாடு முழுவதும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்- பிரதமர் மோடி அறிவிப்பு

ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், முதற்கட்ட தளர்வுக்கு பிறகு மக்கள் யாரும் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், மக்களின் பொறுப்பற்ற தன்மை கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் எனவும் எச்சரித்தார். தற்போது செய்யக்கூடிய சிறிய தவறுகளுக்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என தெரிவித்த அவர், அரசின் விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார். சரியான நேரத்தில் நடவடிக்கையை எடுத்தால்தான் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்த பிரதமர் மோடி, கட்டுப்பாடுகள் மூலம் பல லட்ச ரூபாயை நாம் மிச்சப்படுத்தியுள்ளோம் என கூறினார். பிரதமர் முதல் சாமானியர் வரை நம் நாட்டில் அனைவரும் ஒன்றுதான் என குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலை சாதாரணமாக கருதிவிடக் கூடாது என தெரிவித்தார்.

பருவமழை காலத்தில் கொரோனா குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக கவனமுடன் இருப்பது அவசியம் என்றார். பிற நாடுகளை ஒப்பிடும் போது நாம் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் 20 கோடி ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் 31 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஏழை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயன் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க இரண்டு தரப்பினர் முக்கியமானவர்கள் என்றும், அவர்கள் விவசாயிகள் மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோர் ஆவர் என தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

source

ADVERTISEMENT

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page