புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு முழு கட்டுப்பாடு: சனி, ஞாயிறு முழுவதும் மூட உத்தரவு

துச்சேரியில் ஊரடங்கில் மதுக்கடைகளுக்கு முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதையடுத்து திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம்.
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அரசு அறிவித்து பல கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் மது, சாராயக்கடைகள் நிலை தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், “கரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் உள்ள அனைத்து மதுபான கடைகள், கள், சாராயக்கடைகள், மதுபார்கள், மதுபான உணவகங்கள் திறக்கக்கூடாது. அதையடுத்து வரும் 26-ம் தேதி திங்கள் கிழமை முதல் அனைத்து மதுபானம் தொடர்பான கடைகளும் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம்.

அதன்பின் கடைகளை அடைக்க வேண்டும். விதிகளை கடைகளை திறந்து மதுபானம் விற்பனை செய்வோர் மீது கலால்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை
கரோனா பரவல்; புதுச்சேரியில் கைதிகளுக்கு பரோல், பார்வையாளர் அனுமதி ரத்து
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு; கட்டுப்பாடுகளை வெளியிட்டார் அரசு செயலாளர்
ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?- மருத்துவர் எழிலன் கேள்வி

 

Source:https://www.hindutamil.in/news/tamilnadu/662182-puducherry-lockdown-update.html

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page