18th October 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க.. நடிகர் விவேக் அட்வைஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடிகர்களும் நடிகைகளும் அரசியல் தலைவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வருகிறது. தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உணர்த்தவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மாஸ்க் போடுவது, கைகளை சுத்தப்படுவதோடு மட்டும் இல்லாமல் மருத்துவ ரீதியான பாதுகாப்பையும் மக்கள் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், அரசு மூலமாக வரும் தடுப்பூசி தான் உயிரைக் காப்பாற்றும். மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரண்டாவது டோஸ் போட்டப்பட்ட பிறகு தான் மருந்து செயல்பட ஆரம்பிக்கும். அதுவரைக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் கொரோனா பாதிப்பு வரும். தடுப்பூசி செலுத்துக் கொண்டாலும் பாதுகாப்போடு இருக்க வேண்டும். திறமையான மருத்துவர்களும் செவிலியர்களும் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Source: Top Tamil News

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page