திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் உதவி்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை சார்பில் ஆக்ஸிஜன் புளோ மீட்டர்கள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை சார்பில் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் புளோ மீட்டர்கள் வழங்கப்பட்டது.

இதனை திருவாரூர் மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் ஜோசப்ராஜிடம், இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் மருத்துவர் பாரதிதாசன், திருவாரூர் கிளை தலைவர் மருத்துவர் ஜின்ரீவ் டேனியல், செயலாளர் மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் கிளை மருத்துவர்கள் செய்திருந்தனர்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page