பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்பும் அரசு மருத்துவர்கள் போராடும் நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது:

அரசு மருத்துவர்கள் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வேண்டி நீண்டகாலமாக போராடி வருகிறோம். 2019 அக்டோபர் 28 ம் தேதி நாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த போது, நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நம் முதல்வர், அடுத்து அமையும் நம் ஆட்சியில் அரசாணை 354 ன் படி ஊதியக் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்கள். எனவே அன்று முதல் முதல்வர் மீது நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் 118 அரசு மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்ட போது, நம் முதல்வர் அரசை கண்டித்தார்கள். அப்போது முதல், தமிழகத்தில் புதிய ஆட்சி எப்போது அமையும் என எதிர்பார்த்து இருந்தோம்.சக மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அப்போது நம் முதல்வர் மிகுந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்ததுடன், அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்கள். அன்று முதல் நம் முதல்வர் தலைமையில் எப்போது ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம்.

மருத்துவர்கள் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தோம். நாம் எதிர்பார்த்தது போலவே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

புதிய ஆட்சியில் முதல் அறிவிப்பாக உயிர்காக்கும் மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றப்பட்டோம்.

அதுவும் தமிழகத்தில் இதுவரை வேறு எந்த முதல்வரும் சந்தித்திராத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா என்னும் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். இந்த கடினமான தருணத்தில் கை கொடுக்கும் சுகாதாரத் துறையையும், அரசு மருத்துவர்களையும் முதல்வரால் என்றுமே மறக்க முடியாது.

இருப்பினும் புதிய அரசு இதுவரை அரசு மருத்துவர்களை திரும்பி பார்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது வேதனையாக உள்ளது.8) மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது என்பதிலிருந்து, தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
நாட்டிலேயே தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதை சாதனையாக, முந்தைய ஆட்சியில் தெரிவித்ததை போலவே இந்த ஆட்சியிலும் சொல்ல வேண்டாம். அதேநேரத்தில் அதற்கு அடித்தளமாக உள்ள அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை தான் ஒவ்வொரு மருத்துவரும் அரசிடம் எதிர்பார்க்கிறோம்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியை போலவே அரசு மருத்துவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுத்தால், தொடர்ந்து களத்தில் உறுதியாக நின்று போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வருகின்ற பிப்ரவரி 10 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் இந்த அரசாங்கத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்புவோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page