பிறந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆதார் பதிவு செய்வதற்கான சில வழிமுறைகள்

பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இந்திய குடிமகனாக, குடிமகளாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். தற்போதைய கால கட்டங்களில் உணவு வாங்கும் கடையில் இருந்து மருந்து எடுக்கும் மருத்துவமனை வரையிலும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. அனைத்து ஆதாரங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. பெரியவர்களுக்கு ஆதார் அட்டை தற்பொழுது எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதார் அட்டை எடுப்பது? அப்படி எடுக்க முடியுமா? என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கும்.

ஆனால் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கூட ஆதார் அட்டையை மிக சுலபமாக எடுப்பதற்கான வழிமுறைகளை தற்பொழுது UIDAI கொண்டு வந்துள்ளது.அதன்படி uidai.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் எப்படி எளிமையாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து என்பது குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை

முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதன்பின்பதாக கெட் ஆதார் எனும் பிரிவின் கீழ் உள்ள புக் அப்பாயின்ட்மெண்ட் என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் உங்களது இருப்பிடம் குறித்த அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்து ப்ரோசிடு என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்பாக நியூ ஆதார் எனும் பிரிவை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் குழந்தையின் பெற்றோர்கள் யாராவது ஒருவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அதில் வரக்கூடிய ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.

பின் தனிப்பட்ட விபரங்களை பதிவிட வேண்டும். விவரங்களை சரிபார்த்த பின்பதாக நாம் செல்ல வேண்டிய நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்து, நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு நாம் கொடுத்துள்ள அனைத்து தகவல்களும் சரியா என்பதை சரி பார்த்து சமிட் செய்யவேண்டும். அதன் பின் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் மையத்திற்கு ஆன்லைனில் நாம் குறிப்பிட்ட நாளில் செல்ல வண்டும்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page