8th December 2021

அகப்பேய் சித்தர் வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

மனதை பேய் என்று உருவகித்து பாடியதால் அகப்பேய் சித்தர் என்ற பெயர் வந்திருக்கலாம். மனமாகிய பேயை வென்று, சித்தியடைந்தவர்.

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றியவர் என்று சொல்லப்படுகிறது. நெசவு தொழில் செய்து வந்தவர். இந்த வணிகத்தின் மூலம் பல மக்களைச் சந்தித்தபோது, அவர்களுடைய இன்ப துன்பங்கள், ஆசாபாசங்கள், அவருடைய மனதில் பதிந்தது. துன்பமில்லாத வாழ்க்கை வாழமுடியாதா என்று சிந்தித்தார். மக்கள் துன்பப்படாமல் வாழ வேண்டும். அதற்கு என வழி என்பதைப் பற்றி யோசித்தார். முதலில் தன்னுடைய மனத்தை அடக்கிட நினைத்தார்.

“ஏ! அகமே ஆசையால் ஆடுகிறாய், வேஷத்தால் ஆடுகிறாய், இப்படி பேயாட்டம் ஆடுகிறாயே அடங்கி கிடக்க மாட்டாயா” என்று குமுறுகிறார்.

இவ்வாறு, மனதிருக்கு கட்டளையிட்டுக் கொண்டே பொருளாசையை விட்டு விட்டு அருள் தேடி அலைந்தார். தக்க ஒரு குருவை தேடி காடுகளில் அலைந்தார்.

அப்பொழுது, ஒரு ஜோதி மரம் இவர் கண்களுக்குத் தெரிந்தது. உடனே அந்த மரத்தில் உள்ள பொந்துக்குள் புகுந்து கொண்டு, வியாசர் பெருமானை தன குருவாக மனதில் நினைத்து தவம் இருந்தார்.

இவருடைய கடும் தவத்தைக் கண்டு மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு, மிகப்பெரும் தவப்பேற்றைக் கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்துவிட்டு மறைந்தார்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்க இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை இயற்றினார்.

இந்த சித்தரின் மூலம் அறிந்து கொள்ள வேண்டியது “அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுதின்னால் நஞ்சுண்ணவும் வேண்டாம், நாதியற்று திரியவும் வேண்டாம், அந்த இறைநாதர் உன்முன் தோன்றுவான் .”
இவர் திருவையாற்றில் சமாதியானார்.

வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.இவர் நவகிரகத்தில் குரு பகவானை பிரதிபலிப்பவர்.
2.ஜாதகத்தில் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
3.பணப்பிரச்னைகள் தீரும்.
4.புத்திரப்பாக்கிய தடை விலகி, புத்திரபாக்கியம் கிடைக்கும்.
5.வியாபாரத்தில் நஷ்டம், சமாளிக்க முடியாத பிரச்சனைகள் ஆகியவை தீரும். செல்வம் சேரும்.
6.வயிறு, குடல், சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
7. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
8.வறுமை அகன்று செல்வம் கிடைக்கும்.

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page