25th September 2021

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

குள்ளமான உருவமைப்பு கொண்டதால் குறுமுனி என்று அதிக தவம் செய்ததால் மாதவ முனிவர் என்றும் பல்வேறு பெயர்களில் சிறப்பிக்கப்படும் அகத்தியரின் வரலாறு பற்றி பல கதைகள் உள்ளன.

தாரகன் என்ற பெயர் கொண்ட அரக்கன் இன்னும் பல அரக்கர்களும் உலக மக்களை தங்கள் தீச்செயல்கள் மூலம் வருத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள்.

இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்பது ஒரு கதை.

மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும் வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்பது மற்றொரு கதை உள்ளது.

குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி என்றும் கும்பமுனி என்றும் பெயர் பெற்றார். இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர் இந்திரன் வேண்டிக்கொண்டால் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் அகத்தியர் தன் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார்.

அகத்தியர் பற்றிய, அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் என்ற நூலில் இந்நூலின் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரியவருகிறது. பன்னிரெண்டாயிரம் பாடல்களைக் கொண்ட நூலை அகத்தியர் அருளிய அகத்தியர் பன்னிரெண்டாயிரம் எனப்படுகிறது.

ஸ்ரீராமர் ராவணனுடன் போரிட்டு கொண்டிருந்தபோது மனச்சோர்வு அடைந்தார். அந்த மனச் சோர்வைப் போக்க அகத்தியர் ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்ற அதிக சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்தார்.

சூரியனின் ஆற்றலை போற்றித் துதிக்கும் இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் கூறி வந்தாலே, முடியாவிட்டால் கேட்டு வந்தாலும், பகைகள் விலகும், எதிலும் தடைகள் நீங்கும், ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்களுக்கு தோஷங்கள் விலகும், குறைகள் நீங்கும். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் உண்டாகும்.

அகத்தியர் புதுச்சேரிக்கு அருகிலுள்ள உழவர் கரையில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். அந்த இடம் அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அது அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் எனப்படுகிறது.

காவிரி நதி உருவாக காரணமானவர் அகத்தியர். சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருவெடுத்து சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது என்பர்.

அகத்தியர் தண்ணீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுமையாக தவம் செய்து அரிய சக்திகளை பெற்றார்.

அகத்தியர் விதர்ப்ப நாட்டு அரசனின் மகளான உலோபமுத்திரையை மணந்தார்.

கயிலையில் சிவபெருமான் திருமணம் நடந்த போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது சிவபெருமான் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி சென்றார்.

அதன்பின் அகத்தியர் வடதிசைக்கு செல்லவில்லை. விந்திய மலையும் அதற்கு பிறகு உயரவில்லை. அதனால்தான் அகத்தியர் 16 போட்டிகளில் ஒன்றாக விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி என்று ஒரு கூற்று உள்ளது.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகரின் கட்டளைப்படி அகத்தியம் என்ற நூலை இயற்றினார்.

ராமர் வனவாசம் செய்த போது சீதையை பிரிய நேர்ந்த போது மிக வருத்தம் கொண்டார். அகத்திய முனிவர் அதனை அறிந்து அவரிடம் சென்று அவருடைய வருத்தத்தைத் தீர்க்க பிரதிஷ்டை செய்து பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கும் படி கற்பித்ததால் சிவன் பிரசன்னமாகி பாசுபதாஸ்திரத்தை தந்தருள்வார் என்றும் அப்படியானால் ராவணன் முதலிய அரக்கர்களை கொன்று சீதையை பெறலாம் என்றும் உபதேசித்தார். அதைக்கேட்ட ராமர் அவரை விரதத்தை மேற்கொண்ட போது சிவபெருமான் பிரசன்னமாகி அவருக்கு உபதேசித்து அருளிய சிவ கீதை.

இவ்வாறு சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது இப்புராணத்தில் 16 அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள சிவகீதை 760 பாடல்களால் ஆனது.

இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும் அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவ நெறியையும் இறைவழிபாடு இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும் மேலும் சிவபூஜை முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.

அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு சிறப்பான பணி செய்துள்ளார். சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் உள்ளது.

அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

தேவாரப் பாடல்கள் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை கொண்டதாக இருந்திருக்கிறது. இதில் கிடைக்காமல் மறைந்து போனது போக தற்போது கிடைப்பவை 797 தான். இவைகள்தான் முதல் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் படிக்க முடியாது என்பதால் இவை அனைத்தின் பலனையும் பெறுமாறு அகத்திய அவற்றில் 25 பதிகங்கள் மட்டும் திரட்டியுள்ளார். அது அகத்தியர் தேவார திரட்டு என்ற பெயரில் இப்போதும் கிடைக்கிறது.

செல்வம் கிடைக்கவும் கடன் தொல்லைகள் நீங்கவும் பாடலொன்றை அகத்தியர் இயற்றியுள்ளார். மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிருடைய முனிவு கூர்ந்த என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 5 மணி அளவில் ஆவது ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மனமொன்றி படித்தால் நிச்சயம் செல்வம் கிடைக்கும். கடன் தீரும். இந்த பாடல் உள்ள ஏடு வீட்டில் இருந்தால் செல்வம் வந்து சேரும் என்று அகத்தியர் தன்னுடைய பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் அகத்தியர் சமாதி கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

1.நவகிரகங்களில் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
2. கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கும்.
3.முன்வினை பாவங்கள் தீரும்.
4. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
5. எல்லாவித நோய்களும் தீரும்.
6. குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
7. இசை கவிதையில் மேம்பாடு ஏற்படும்.
8. பூர்வீக சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும்.
9. பெயரும் புகழும் உண்டாகும்.

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page