புலியை வசியம் செய்த புலிப்பாணி சித்தர் வரலாறு!

இவர் போகரின் முதன்மைச் சீடர். இவருடைய பூர்விகம் சீனதேசம். பழனி தண்டபாணியை போகர் உருவாக்கியபோது, அதில் இவருடைய பங்கு மிக முக்கியமானது.

ஒருமுறை போகர், குடிப்பதற்காக தண்ணீர் கேட்டார். தண்ணீர் அருகில் இல்லை . எனவே இவர் ஒரு புலியை வசியப்படுத்தி, அதன் மீது ஏறிச் சென்று, வெறும் கையாலையே, போதிய தண்ணீர் கொண்டு வந்தார்.
அதனால் இவர் புலிப்பாணிச் சித்தர் என அழைக்கப்பட்டார். குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு, புலிகளை அவர் வசியம் செய்து, தேவையான மூலிகைகளைப் பறிக்க, அதன் மேல் ஏறி, மலை ஏறி இறங்கியுள்ளார்.

இவர் அதி தீவிர சிவபக்தர். போகரின் நிர்வகல்ப சமாதி ஏற்பாட்டின்போது, முருகனுக்கு அடியில் குகை போன்ற சமாதி அமைப்பை உருவாக்கியும் போகர் சமாதி நிலை எய்தியவுடன் குருவின் ஆணைப்படி அந்தக் குகையை பெரிய பாறை கொண்டு மூடியவரும் இவர்தான்.

இவர் ஜோதிடம், வான சாஸ்திரம், கணிதம், சித்த மருத்துவம், ஜாலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.

போகர் சீனாவில் சென்று, தன் சக்திகளை இழந்து, அங்கேயே தங்கிவிட்டபோது, இவர் சீனாவிற்கு சென்று, போகரை முதுகில் ஏற்றி வந்து, ஒரு தண்டத்தை நிறுத்தி, அதற்க்கு உபதேசிப்பது போல் உபதேசித்து அதை போகர் கேட்டு இழந்த சக்திகளை திரும்ப பெற்றதாகக் கூறப்படுகிறது.

போகர் சமாதி நிலைக்குச் செல்லும்முன், பழனி தண்டாயுதபாணியின் பூஜைகளை கவனித்துக் கொள்ள, இவரை போகர் நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது.

வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1.இவர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர்.
2.செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் குறைகளை நீக்குபவர்.
3.செவ்வாய் தோஷ திருமண தடைகள் நீங்கும்.
4.நிலத்தகராறு, வழக்குகள் தீரும்.
5.சொந்தமாக வீடு, மனை சேரும்.
6.ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
7.மனதைரியம் கிடைக்கும்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page