25th January 2022

நீரழிவு நோய் தன்மையை குறைக்கும் குதிரைவாலி சாலட்…

குதிரைவாலி என்பது சிறுதானியம். தற்போது தானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. குதிரைவாலி அரிசியில் குறைந்த அளவு கலோரி உள்ளது.நாம் வழக்கமாக எடுத்துகொள்ளும் அரிசி, கோதுமை உணவை காட்டிலும் இதில் அடங்கியிருக்கும் கலோரியின் அளவு மிக குறைவு. அதோடு நார்ச்சத்தும் மிகுந்திருக்கு உணவாகவே இது இருக்கிறது.

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். அந்த வகையில் குதிரைவாலி சாலட் எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாங்க…

குதிரைவாலி அரிசி

தேவையான பொருட்கள்:

குதிரை வாலி – ஒரு கப்

தக்காளி – இரண்டு

வெள்ளரிப் பிஞ்சு – ஒன்று

எலுமிச்சம் பழச் சாறு – மூன்று டேபிள் ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 10 பல்

வெங்காயம் – ஒன்று

குடமிளகாய் – ஒன்று

சாலட் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

10 பல் பூண்டையும் விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, குட மிளகாய், வெள்ளரி, வெங்காயம் ஆகிய இவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குதிரை வாலி அரிசியை நன்றாக ஊறவைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றாகக் கலந்து எலுமிச்சம் பழச் சாறு, மிளகு, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு, எண்ணெய் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பின்னர் முன்பு நாம் வேக வைத்த குதிரை வாலி அரிசியை மேற்கண்ட காய் கறிகளுடன் நன்றாகக் கலந்து சில மணி நேரங்கள் நன்கு குளிரவிட்டுப் பரிமாறவும். இதோ இப்போது சுவையான குதிரை வாலி சாலட் தயார்.

 

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page