குணமடைந்து வருகிறேன் – குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் !

எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், குணமடைந்து வருகிறேன் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நான் விரைவில் நலன் பெற வேண்டி நாட்டு மக்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு துறை தலைவர்களிடமிருந்தும் வந்த தகவல்களைப் பார்த்து தான் உணர்ச்சிவயப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளார்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துமவனைக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு செவ்வாய்க்கிழமை இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு செவ்வாய்க்கிழமை காலை இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவா்கள் குழு அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது.

Source : தினமணி

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page