25th January 2022

அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை: அப்பாவு விளக்கம்!

அதிமுக உறுப்பினர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடவில்லை என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிசாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதால் போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் பேரவையில் நேற்று புதன்கிழமை பேரவையில் கொடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து கூச்சலிட்ட அதிமுகவினர், பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல் தலையீடு இல்லை. அதனால் யாரும் பயப்படத்தேவையில்லை. அதிமுகவினர் எங்க அப்பன் குதருக்குள் இல்லை என்பது போல செயல்படுகின்றனர். நீதிமன்ற அனுமதியுடன் தான் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

இந்நிலையில், புதன்கிழமை பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் தாங்களாகவே வெளியேறினர். நான் வெளியேற்றவில்லை. மக்களுக்கான பிரச்னைகளை பேச வேண்டிய அவையில், தனிப்பட்ட பிரச்னையை எழுப்பக் கூடாது, இருப்பினும் நான் அதிமுகவினரை அனுமதித்தேன். ஆனால், என் அனுமதி பெறாமல் அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டனர். பின்னர் அவர்களாகவே பேரவையில் இருந்து வெளியேறினர். நான் வெளியேற்றவில்லை என பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page